வழங்கும் நடைமுறையினை அறிவிப்பதற்காக அனுமதிப்பத்திர தாரரர்களிற்கு 2015 மே 26 ஆந் திகதி ஏஈஆர்சீ கருத்தரங்கு ஒன்றை நடாத்தியது.
புதிய அதிகாரச்சட்டம் தொடர்பான முன்னுரையொன்றை தலைவரான போராசியர் பிரினாத் டயஸ் அவர்கள் வழங்கினார். அவர் இலங்கையின் அணுத் தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டங்களின் வரலாறு, புதிய அதிகாரச்சட்டத்திற்கான காரணங்கள், ஏஈஆர்சீ தொழிற்பாடுகளும் கட்டமைப்பும் மற்றும் அதிகாரச்சட்டத்தில் உள்ளடங்கியுள்ள விசேட பண்புகள் குறித்து உரையாற்றினார். 
புதிய அதிகாரச்சட்டத்திலுள்ள பிரமாண ஒழுங்குவிதிகள் தொடர்பில் ஏஈஆர்சீ இன் பணிப்பாளரான திரு. அணில் ரன்ஜித் அவர்கள் விரிவான உரையொன்றை நிகழ்த்தினார். அனுமதிப்பத்திர மற்றும் களப்பரிசோதனை தேவைப்பாடுகள், மேன்முறையீட்டு நடைமுறைகள், கதிர்வீச்சு மூலங்களின் பாதுகாப்பும் பரமரிப்பும் மற்றும் ஏனைய பிரதான பிரமாண தொழிற்பாடுகள் குறித்து அவர் உரையாற்றினார். 
ஏஈஆர்சீ இன் பிரதிப் பணிப்பாளர் திரு. ரீ.எச்.எஸ். தேனுவர அவர்கள் அறிவித்தல்களுக்கான நடைமுறைகள், நடைமுறையில் அனுமதிப்பத்திர வழங்கலும் மதிப்பிடலும் தொடர்பான விபரங்களை வழங்கினார். விதிவிலக்குகளிற்கான தேவைப்பாடுகள், அறிவித்தல்களுக்கான தேவைப்பாடுகள், அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் மற்றும் அவற்றின் கட்டமைப்பு மற்றும் திட்டங்களை அங்கீகரிக்க வேண்டிய தேவைகளை அவரது உரையில் உள்ளடக்கியிருந்தார். 
அனுமதிப்பத்திரதாரர்களால் எழுப்பப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் கருத்தரங்கின் பின்னர் கலந்துரையாடப்பட்டது. 76 அனுமதிப்பத்திர தாரர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர்.