சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் ஸ்தாபக அங்கத்தவராக அணு விஞ்ஞான தொழில்நுட்பத்துடன் இலங்கையின் பங்குபற்றல் 1957 இல் தொடங்கயது. அதனைத் தொடர்ந்து 1962 இல் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கதிரியக்க நிலையம் தாபிக்கப்பட்டு 1969 இன் 19 ஆம் இலக்க அணுசக்தி அதிகாரசபை அதிகாரச்சட்டத்தினால் 1970 ஆம் ஆண்டில் அணுசக்தி அதிகாரசபை தாபிக்கப்பட்டது. அதிகாரசபைக்குரிய இரண்டு பிரதான பொறுப்புக்களை அணுசக்தி அதிகாரசபை அதிகாரச்சட்டம் பகிர்ந்தளித்திருந்தது. அவையாவனää இலங்கை மக்களின் நலனுக்காக அணுத் தொழில்நுட்பத்தின் பாவனையை ஊக்கப்படுத்தல் மற்றும் கதிர்வீச்சுப் பாவனையிலும் கதிரியக்கச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களையும் அயனாக்கல் கதிரியக்க தாக்கங்களிலிருந்து பொதுமக்களையும் பாதுகாத்தல் என்பனவாகும்.


2014 ஆம் ஆண்டு வரைää கதிரியக்க கதிர்வீச்சு பாவனைகள் தொடர்பிலான தேசிய ஒழுங்கமைப்பாளராகவும் மருத்துவம்ää கைத்தொழில் மற்றும் விவசாயத் துறைகளில் அணுத் தொழில்நுட்ப பாவனைக்கு வசதியளிப்பதற்கான பொறுப்புடைய தேசிய அமைப்பாகவும் இலங்கையில் சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் பிரதிநிதியாகவும் அணுசக்தி அதிகாரசபை தொழிற்பட்டு வந்தது. நூலக வசதிகளுடன் அணுசக்தி அதிகாரசபைக்கு புதிய கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கையில் அணுத்தொழில்நுட்ப பிரயோக செயற்பாடுகள் விரிவடைந்தமையின் விளைவாக சுதந்திரமான ஒழுங்கமைப்பின் தேவை உணரப்பட்டது.

 

building 

 

2001 இல் நிர்மாணிக்கப்பட்ட அணு சக்தி அதிகாரசபை கட்டிடம

 

2014 ஒக்தோபரில் 2014 இன் 40 ஆம் இலக்க இலங்கை அணுசக்தி அதிகாரச்சட்டத்தின் சட்டமாக்கம்ää அணுசக்தி ஒழுங்கமைத்தல் பேரவை (ஏஈஆர்சீ) மற்றும் அணுசக்தி சபை (ஏஈபீ) என்ற பெயரில் இரண்டு நிறுவனங்களை தோற்றுவித்தது. பிரமாண ஒழுங்குவிதிகள் கோவையொன்றை தாபித்து பேணிவருவதன் மூலம் அயனாக்கல் கதிர்வீச்சின் சாத்தியமிக்க பாதிப்பான தாக்கங்களிலிருந்து ஆட்கள்; மற்றும் சுற்றாடலின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொறுப்பை ஏஈஆர்சீ இற்கும் அணு தொழில்நுட்ப பிரயோகங்களிற்கு வசதியளிக்கும் பொறுப்பை ஏஈபீ இற்கும் மேற்படி அதிகாரச்சட்டம பகிர்ந்தளித்துள்ளது. ஏஈஆர்சீ மற்றும் ஏஈபீ என்பன தாபிக்கப்பட்டவுடன் நடைமுறையிலிருந்த ஏஈஏ இல்லாதொழிந்தது.


ஏஈஆர்சீ 2015 சனவரி 01 ஆந் திகதி தனது தொழிற்பாடுகளை ஆரம்பித்தது. பிரமாண ஒழுங்குவிதிகள் கோவையொன்றை தாபித்து பேணிவருவதன் மூலம் அயனாக்கல் கதிர்வீச்சின் சாத்தியமிக்க பாதகமான தாக்கங்களிலிருந்து ஆட்கள் மற்றும் சுற்றாடலின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொறுப்பு அதற்குள்ளது. 2014 இன் 40 ஆம் இலக்க இலங்கை அணுசக்தி அதிகாரச்சட்டத்திலுள்ள கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக கதிர்வீச்சு மற்றும் கதிரியக்கத்தில் ஈடுபடுகின்ற சகல பாவனையாளர்களிற்காகவும் அனுமதிப்பத்திர வழங்கலும் களப்பரிசோதனையும்ää கதிர்வீச்சுப் பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதிக் கட்டுப்பாடுää கதிரியக்க கழிவு முகாமைத்துவம்ää கதிர்வீச்சுப் பொருட்களின் பௌதீக பாதுகாப்பை உறுதிப்படுத்தல்ää அணு அல்லது கதிர்வீச்சு அவசர நிலைமைகளை எதிர்கொள்வதற்கான இயலுமையினை அபிவிருத்தி செய்தல்ää சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்துடனான அணுப் பாதுகாப்பு உடன்படிக்கையிலுள்ள இலங்கைக்கான கடப்பாடுகளை நிறைவேற்றுதல் மற்றும் மேற்குறிப்பிட்டவைகளுக்குத் தேவையான சட்டரீதியான மற்றும் பிரமாண ரீதியான சட்டகத்தினை தாபித்தல் என்பவற்றிற்கு முறைமையொன்றை ஸ்தாபிக்கும் தேவை காணப்படுகின்றது.