இல. 977/18, கண்டி சாலை , புலுகா சந்தி,
களனி, இலங்கை

Tel: +9411 2987860
Fax: +9411 2984099

2014 இன் 40 ஆம் இலக்க இலங்கை அணுசக்தி அதிகாரச்சட்டத்தினால் (சட்டம்) 2015 சனவரி 01 ஆந் திகதியிலிருந்து அமுலுக்குவரும் வகையில் இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை தாபிக்கப்பட்டதுடன் மின்வலு, எரிசக்த்p மற்றும் வணிக அபிவிருத்தி அமைச்சின் கீழ் தொழிற்பட்டு வருகின்றது. சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம், அயனாக்கல் கதிர்வீச்சுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ஒழுங்குபடுத்தி, கதிரியக்க மூலங்களை பராமரித்துப் பாதுகாப்பதற்கும் அணுப் பராமரிப்பு மற்றும் அணுப் பாவனையை தடுத்துப் பாதுகாத்தல் தொடர்பில் இலங்கையினால் கைச்சாத்திடப்பட்டுள்ள சர்வதேச உடன்படிக்கைகளிலுள்ள கடப்பாடுகளை உறுதிப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுப்பதற்கும் பேரவை பொறுப்பாக உள்ளது.

எமது செயற்பாடுகள்

அனுமதிப்பத்திரங்கள் மற்றும் அங்கீகாரங்கள்

கதிவீச்சுப் பாதுகாப்பு களப்பாpசோதனைகள

அவசரகால தயார்நிலை மற்றும் பதில்

பயிற்சியூம் விழிப்புணாவூம்

கௌரவ அமைச்சர்


தற்போது ஒழுங்குபடுத்தல் பேரவை மின்வலுஈ எரிசக்தி மற்றும் வணிக அபிவிருத்தி அமைச்சின் கீழ் தொழிற்படுவதுடன் கௌரவ மகிந்த அமரவீர அவர்கள் இந்த விடயத்திற்குப் பொறுப்பான தற்போதைய அமைச்சராக இருக்கின்றார்.

மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர்


தற்போது செல்வி வசந்தா பெரேரா மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளராக செயல்பட்டு வருகிறார். இதற்கு முன்னர் அவர் சுகாதாரம் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி அமைச்சுகளின் செயலாளராக பணியாற்றியுள்ளார். அவர் இலங்கை நிர்வாக சேவையின் அதிகாரி. பல துறைகளில் பணியாற்றிய அவர் நிதி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சகங்களில் முக்கிய பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

தலைவர்


இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை கவுன்சிலின் புதிய தலைவராக டாக்டர் டி.எம்.எஸ். திசநாயக்க 2020 ஜனவரி 6 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் மாண்புமிகு மஹிந்த அமரவீர. மஹாவேலி மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநர் ஜெனரலாக டாக்டர் திசானநாயக்க பணியாற்றியுள்ளார், தேசிய போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல், மகாவேலி மேம்பாட்டு ஆணையத்தின் மனித மற்றும் நிறுவன மேம்பாட்டு இயக்குநர் மற்றும் இலங்கை உள்ளாட்சி நிர்வாக நிறுவனத்தின் துணை இயக்குநர்.

பேரவையின் ஆளுகைச் சபை


பேரவைக்கான தலைவரையும் உறுப்பினர்களையும் நியமிப்பதற்கான அதிகாரத்தை சட்டத்தின் 14 ஆம் பிரிவு அமைச்சருக்கு வழங்கியுள்ளது. பேரவையின் பணிப்பாளர் சபை பின்வருமாறு தலைவர் உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

  1. அணு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் அல்லது கதிர்வீச்சுப் பாதுகாப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்ற மூவர்.
  2. பேரவையின் குறிக்கோள்களுடன் இணைந்த அல்லது தொடர்புபட்ட சட்டரீதியான விடயங்களில் அனுபவமுள்ள ஒருவர்.
  3. மேலதிக செயலாளர் அல்லது குறித்த அமைச்சரால் பிரேரிக்கப்பட்ட சுற்றாடல் என்ற விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அமைச்சுப் பணிப்பாளர் ஒருவர்


பணிப்பாளர் நாயகம்


திரு. அணில் ரன்ஜித் அவர்கள் பேரவையின் முதலாவது பணிப்பாளர் நாயகமாக 2015 நவம்பர் 03 ஆந் திகதி நியமிக்கப்பட்டார். அவர் தனது முதலாவது சிறப்புப் பட்டத்தை 1985 இல் BSc(பௌதீக விஞ்ஞானம்) மேலும் வாசிக்க